Friday, February 1, 2013

ஒட்டப்பிடாரம் -கட்டபொம்மன்,வ.உ.சிதம்பரம்


பாஞ்சாலங்குறிச்சி--வீரபாண்டிய கட்டபொம்மன்




வீரபாண்டிய கட்டபொம்மன்

kayathar kattabomman kottai




வ.உ.சிதம்பரம்




பாலகணேசன்

தூத்துக்குடி மாவட்டம்


தூத்துக்குடி மாவட்டம்



இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம்தூத்துக்குடி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வருவாய்க் கோட்டம்

  1. திருச்செந்தூர்
  2. கோவில்பட்டி
  3. தூத்துக்குடி

வட்டம்


  1. எட்டயபுரம்
  2. கோவில்பட்டி
  3. ஒட்டப்பிடாரம்
  4. சாத்தான்குளம்
  5. ஸ்ரீவைகுண்டம்
  6. தூத்துக்குடி
  7. திருச்செந்தூர்
  8. விளாத்திகுளம்

நகராட்சி


  1. காயல்பட்டிணம்
  2. கோவில்பட்டி

சட்டமன்றத் தொகுதிகள்


  1. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) 
  2. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) 
  3. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) 
  4. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) 
  5. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) 
  6. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) 

மாநகராட்சி

  • தூத்துக்குடி

முக்கிய இடங்கள்

[தொகு]தூத்துக்குடி

நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

[தொகு]ஸ்ரீவைகுண்டம்

இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.

[தொகு]ஒட்டப்பிடாரம்

விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.வீரபாண்டிய கட்டபொம்மன் , ஈகி சுந்தரலிங்கனார் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்கள் வாழ்ந்து மறைந்த இடம் .

[தொகு]குலசேகரபட்டினம்

திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

[தொகு]திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

[தொகு]எட்டயபுரம்

புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு பாரதியார் பிறந்த இல்லம், பாரதியார் மணிமண்டபம் ஆகியவை தமிழக செய்தி-மக்கள் தொடர்புதுறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

[தொகு]பாஞ்சாலங்குறிச்சி

17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.இங்கு 1974 ல் தமிழக அரசால் கட்டபொம்மன் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டைக்கு அருகில் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட கோட்டை தோண்டி எடுக்கப்பட்டு முள்வேலி போடப்பட்டுள்ளது.


மாவட்டத் திருவிழாக்கள்

  • குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா (அக்டோபர்)
  • ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமி கோவில் விழாக்கள் (ஆகஸ்ட்)
  • வெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா (மே)
  • தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா (ஆகஸ்ட்)
  • புளியம்பட்டி புனித அந்தோணியார் திருவிழா (மே)
  • வீரபாண்டிய கட்டபொம்மன் விழா (ஜனவரி)
  • பாரதியார் விழா (செப்டம்பர், டிசம்பர்)
  • புனித சவேரியார் திருவிழா- மணப்பாடு (செப்டம்பர்)

பாலகணேசன்